குத்தாலம் அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமையிலான அரசு உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றார்கள்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.