செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அம்மா கிளினிக் வந்து கட்டடத்துக்கு வாடகை கொடுக்காமல், எந்த விதமாக ஒரு கட்டமைப்பு இல்லாமல், இவங்களா போய் திறந்து வைத்தார்கள். திறந்து வைத்ததை எப்படி திறந்தார்கள் ? நீங்கள் எல்லாம் பாத்திருப்பீர்கள்…. பலூனாக கட்டி வைத்தார்கள், ஊசியை வைத்து ஒவ்வொரு பாலுனை ஒரு மந்திரி போய் குத்தி குத்தி உடைச்சாங்க, அந்த பலூனும் புஸ்ஸுன்னு ஆகிட்டு, அம்மா கிளினிக்கும் புஸ்ஸுன்னு ஆகிட்டு.
அந்த கிளினிக் செயல்படவில்லை, ஏற்கனவே கிளை சுகாதார நிலையங்கள் இருக்கிறது, ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. அங்கே இருக்கக்கூடிய ஒன்றிரண்டு பேரை கடன் வாங்குனீர்கள் அதுவும் கெட்டுபோச்சு, இதுவும் கெட்டுபோச்சு. ஆக இருக்கக்கூடிய இடங்களில் சிறந்த முறையில் அந்த கட்டமைப்புகளை நாங்கள் தரப்படுத்துவோம்.
நீட் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், ஆளுநர் உரையில் கூட நீட் நிலைபாட்டை நாங்கள் சொல்லி இருக்கிறோம். தொடர்ச்சியான முயற்சிகளை, அதிமுகவை போல உண்மைகளை மறைத்து விட்டு நாடகமாடுவதற்காக இல்லாமல் உளப்பூர்வமாக தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்.
எனவே தான் ஒரு முழுமையான டெலிகேஷன் போயிருக்கோம், அவர்களும் எங்களுடன் வந்திருக்கிறார்கள் நான் அதை மறுக்கவில்லை, ஆனால் டெலிகேஷனுக்கு வருகிறார்களே ஒழிய உள்ளபடியான அழுத்தத்தை அவர்கள் கொடுக்கவில்லை ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதும் தரவில்லை என தெரிவித்தார்.