குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ்(67) உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புராஸ்டேட் மற்றும் இதர புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதை விடவும், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை வீழ்த்தி 1978-இல் உலகச் சாம்பியன் பட்டம் என்பதால்தான் இவர் மிகவும் பிரபலமானார்.