இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்திருப்பதாவது, “கிழக்கு லண்டனில் உள்ள Leyton-ல் துப்பாக்கி முனையில் எனது கடிகாரம் என்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. நான் என்னுடைய மனைவி Faryal உடன் சாலையை கடந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில அடிகள் பின்னால் Faryal வந்தார். இந்த நிலையில் திடீரென இரண்டு ஆண்கள் என் அருகே ஓடி வந்தனர்.
அதில் ஒருவன் என்னுடைய முகத்திற்கு நேராக துப்பாக்கியை நீட்டி கை கடிகாரத்தை கொடுக்குமாறு கேட்டான்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமீர்கான், நானும் என் மனைவியும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். அமீர்கான் முன்னாள் Unified லைட்வெயிட் சாம்பியன் ஆவார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் லைட்வெயிட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.