Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குத்துவிளக்கோடு நின்ற வாலிபர்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோவில் குத்துவிளக்குகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே களியல் வைகுண்டம் பகுதியில் முத்துக்காவு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த 18 குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கடையல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளறடை பகுதியில் இருக்கும் பாத்திர கடையில் 2 பேர் குத்துவிளக்குகளை விற்பனை செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வெள்ளறடை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெள்ளறடை பகுதியை சேர்ந்த பாபு என்பதும், வெள்ளச்சிப்பாறை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் வைகுண்டம் பகுதியில் இருக்கும் முத்துக்காவு‌ கோவிலின் குத்து விளக்குகளை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கடையல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடையல் போலீசார் வெள்ளறடைக்கு சென்று குத்துவிளக்குகளை மீட்டனர். மேலும்  செல்வராஜன் மற்றும் பாலு ஆகிய 2 பேரையும் கடையல் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |