திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. திருமண பத்திரிக்கை அடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை தட புடலாக் செய்து வந்த நிலையில் இருவருக்கும் கோவிலில் உறவினர்கள் மத்தியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
இதன் பிறகு இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மணமகனின் காலை பார்த்த மணமகள் இரண்டு கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசம் இருப்பதை கண்ட கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மணமகள் கேட்டபோது ஒரு விபத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக மணமகன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் அதை தன்னிடம் முன்பாகவே கூறாமல் மறைத்து விட்டதாக கூறி தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மணமகன் வீட்டார் கூறியுள்ளனர். மேலும் மணமகன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருப்பதால் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் மணப்பெண் வீட்டார் கூறியுள்ளனர். இதையடுத்து மணமகள் மற்றும் மணமகள் இருவரும் பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டு திருமணமான சில மணி நேரத்திலேயே திருமண பந்தம் முடிந்தது.