Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குன்றத்தூரில் 3 மாதங்கள் அகழ்வாய்வு பணி…. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட தகவல்….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அந்த பகுதியில் சிறிய அளவில் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு 3 தொல்லிகாப்பிய மேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்க கிடந்த பானை ஓடு மற்றும் கற்கள் கிமு 300 முதல் கிபி 300 ஆம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ள புதிய தொல்லியல் துறையின் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த பகுதி அகழ்வாய்ய்கள் மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தொல்லியல் துறைக்கு அனுமதி கிடைத்தது. இதனையடுத்து நேற்று வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழ்வாய்வு பணி தொடங்க பூமி பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை வட்டார தொழில் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமை தாங்கி அகழ்வாய் பணியை தொடங்கி வைத்தனர். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ், வெற்றிசெல்வி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து செய்தியாளர்களிடம் கூறியது, வடக்குப்பட்டு நத்தமேடு பகுதியில் வரலாற்று சிறப்பு தொல்லியல் மேடு உள்ளது. இங்கு 30 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலம் என்ற அளவில் அகழ்வாய்வு செய்ய பணி தொடங்கப்பட்டுள்ளது. அகழ்வாய்வின் பணி 3 மாதங்கள் வரை நடைபெறம். இந்த அகழ்வாய்வின் போதுதான் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பது தெரியவரும். மேலும் கிடைக்கப்பெறும் பொருட்கள் தடயங்களையடுத்து பணிகள் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |