Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குன்றி-கடம்பூர் சாலையில் யானைகளின் நடமாட்டம்…. ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. எச்சரிக்கும் வனத்துறையினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உறவினருடன் குன்றியிலிருந்து கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென வந்த காட்டு யானை பழனிச்சாமியை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அவருடன் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அஞ்சனைப் பிரிவு அருகே யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மழைக்காலங்களில் யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு மூங்கில் பயிர்களை தேடி வரும். கடந்த சில நாட்களாக கடம்பூர்- குன்றி சாலையில் யானைகள் சுற்றி திரிகிறது. எனவே மாலை நேரங்களில் குன்றி-கடம்பூர் சாலையில் செல்ல வேண்டாம் எனவும், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |