மகாலட்சுமி உடைய இன்னொரு உருவமான வலம்புரி சங்கு தரிசித்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்,
தேவர்களும், அசுரர்களும், பாற் கடலைக் கடைந்தபோது 16 வகையான தெய்வீக பொருளாம் வெளிய வந்தது. அதுல வலம்புரி சங்கு முக்கியமானது. திருமகள் வலம்புரி சங்கை எடுத்து வர மஹா விஷ்ணு இடக்கையில் சங்கையும், வலக்கையில் தேவியையும், ஏந்திட்டு வராரு. வலம்புரி சங்கைய் வழிப்பட்டால் லக்ஷ்மி, மகாவிஷ்ணு, இவர்களை சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். வலம்புரி சங்கு வீட்டில் வைத்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், நம்மை விட்டுப் போய்விடும். அதனால செல்வம் அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை நம்ம மேல படும்.
இதனால் ரொம்ப சாமானியராக இருக்கிறவங்க கூட நல்ல பெரிய அளவுக்கு வருவாங்க. எங்களுடைய மூதாதையர்கள் ரொம்ப சிறப்பாய் இருந்தார்கள். நாங்கள் தான் இப்படி இருக்கோம் கவலைப்படக் கூடிய எல்லாருமே வழிபாடு செய்வதால். இழந்த செல்வங்கள் பல நூறு மடங்கு சேர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நாம் எல்லோருமே வீடு கட்டுவது ஒரு ஆசையாக …. கட்டும் வீடு கட்டும் போது வெளிச்சம் வாஸ்து இந்த மாதிரி எல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு பார்த்து கட்டுவோம்.
100% வாஸ்து வீடு வரவே செய்யாது… ஏதோ ஒரு மூலையில் ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அது இருந்தாலும் இந்த வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் மஞ்சள் நீர் துளசி இந்த சங்குல போட்டு காலையில நம்ப வீட்ட சுத்தி தெளிச்சி விட்டால் இந்த வாஸ்து குறைபாடு நீங்கிவிடும். கீழே வரக்கூடிய நாட்களில் வலம்புரி சங்கில் சுத்தமான பசும்பால் இரவு வைத்து காலையில் எடுத்து அத பூஜை செய்தால், நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சகல குறைகளும் நீங்கி சிறப்பாக வாழ முடியும்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம், புரட்டாசி பவுர்ணமி, ஆனி மாதத்து வளர்பிறை, அஷ்டமி சித்திரை, மாத பவுர்ணமி இந்த நாட்களில் இரவு பசும் பால் விட்டு மகாலக்ஷ்மியாக நினைத்து பூரித்து வந்தால் எல்லா கவலைகளும் நீங்கும்.
வலம்புரி சங்கு நம்ம வீட்ல தான் வைக்கணும் அப்படிங்கிறது இல்ல. நம் தொழில் நிறுவனங்கள், கடைகளில் கூட வைக்கலாம். என்ன ஒன்னு இது மகாலட்சுமி உடைய அம்சம் அதனால சுத்தமாக வைத்து பூஜித்து வருவது ரொம்ப முக்கியமானது. சில குடும்பங்களில் கணவன் மனைவியின் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். அந்த மாதிரியான பாதிப்பு இருக்கிறவங்க சித்திரா பவுர்ணமி, ஆணில வர வளர்பிறை அஷ்டமி, ஆடி மாதத்தில் வரும் புரட்டாசி பவுர்ணமி இந்த மாதிரியான நாட்களில் சங்கில் பால் ஊத்தி பூஜை செய்து வந்தால் ஆயுட்காலமும் நீடிக்கும் என வேதவாக்கியங்கள் சொல்லுது . அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வேண்டும் என்றாலும் உரிய காலகட்டங்களில் பூஜை செய்யும் போது சிறப்பான சந்தான பாக்கியத்தையும் வாங்க முடியும்.