Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குப்பைகளை இப்படித்தான் பிரிக்க வேண்டும்….. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் “நம்ம ஊரு சூப்பரு” என்ற  இயக்கம் மூலம் திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை  தரம் பிரித்து பயிற்சி அளித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |