திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைத்து குப்பை வாகனங்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களில் கொடுக்காமல் சாலைகள், கால்வாய்கள் ஏரி,குளம் போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை திட்டம் விதிகளின் கீழ் அபராதம் விதிப்பதோடு நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
மேலும் தினமும் வீடுகளில் சேரும் குப்பையை தூய்மை பணியாளரிடம் தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஆவடி மாநகராட்சி சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்படும். குப்பை இல்லாத தூய்மை மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சியை கொண்டுவர வேண்டும் எனவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.