வேலூரில் மாங்காய் மண்டிக்கு ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ, மேயரிடம் வியாபாரிகள் புகார்களை தெரிவித்தனர்.
வேலூரில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் மாங்காய் மண்டி, நிக்கல்சன் கால்வாய் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய சென்றார்கள். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் நிறைய புகார்களை தெரிவித்தார்கள். அப்போது வியாபாரிகள் பேசியதாவது, மாங்காய் மண்டியில் நாள்தோறும் குப்பைகள் அதிகமாக சேருகின்ற நிலையில் அதை அள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த குப்பைகளை நாங்களே அகற்றி மண்டிக்கு பின்புறம் கொட்டி குப்பைகளை குவியலாகக் குவித்து வைத்து இருக்கோம். அதையும் அள்ள வரவில்லை. எனவே நாள்தோறும் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர். மேலும் கடந்த சில வாரங்களாக மண்டிக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்படுகிறது.
இந்த வரியை மாநகராட்சி அதிகாரி வசூல் செய்கிறாரா அல்லது தனிநபர் சார்பாக வசூலிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. வரி அதிகமாக வசூலிக்க படுவதால் அனைத்து வியாபாரிகளும் பெரும் அவதிப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திகேயன் எம்.எல்.ஏ இனி வரி வசூலிக்கப்படாது என்றும், தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.