Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை துணை விடுதிகள் 2016 கீழ் வீடுகள் முதல் வணிக வளாகங்கள் வரை 100 முதல் 1000 வரை அபராதமும் பொது இடங்களில் குப்பை கொட்டுவது வீடியோ எடுத்து ஆதாரமாக தருபவர்களுக்கு 200 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் இது அனைத்து இடங்களிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் காட்பாடி தாராபடவேடு பகுதியில் காட்பாடி திருவலம் சாலையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் கீழேயே மக்கள் குப்பைகளை கொட்டி சென்றிருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது இந்த நிலையில் வீட்டின் குப்பைகள் மட்டுமல்லாமல் உணவகங்களின் கழிவுகளும் கொட்டப்பட்டு இருக்கிறது. அதனால் அதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |