கோட்டை வளாகத்தில் உள்ள குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலையம் எதிரில் கோட்டை வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அகழி கரையோரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் குவிந்து கிடைக்கின்றன . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த குப்பைகளில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காணப்பட்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.