ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கீதாவை காவல் நிலையத்திற்கு வரவைத்து மணிபர்சை ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்டு பெண்ணின் மணிபர்சை ஒப்படைத்த கோபாலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Categories