Categories
உலக செய்திகள்

குப்பையில் கொரோனா தடுப்பூசி… சர்சையில் சிக்கிய ஜெர்மன்…. வெளியான உண்மை தகவல் …!!

ஜெர்மனில் விலைமதிப்பற்றவையாக கருதப்படும் தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படுவதாக ஜெர்மன் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெர்மனில் FDP கட்சியின் தலைவரான கிறிஸ்டியன் லின்ட்டர் கொரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் மே மாதத்திற்குள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசிகளை குப்பைகளை வீசி எறியப்படுவதை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா ?என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .அதில் கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசப்பட்டதாக அவரின் கூற்று முற்றிலும் தவறில்லை சிறிய அளவிலான தடுப்பூசிகள் குப்பைகளில் வீசப்படதான் செய்கின்றது.

சில மாகாணங்களில் ஒரு டோஸ் தடுப்பூசியை கூட வீணாக்காமல் தான் இருக்கிறது. மேலும் வேறு சில மாகாணங்களில் பயணத்தின் போது கூட தடுப்பூசிகளை குளிர்பதன பெட்டிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தடுப்பூசிகள் கெட்டுப்போகும் நிலையிலிருந்தால் வீசி எரிய தான் செய்ய வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. எனவே பெருமளவில் தடுப்பூசிகளை வீணாக்குவதாக குற்றசாட்டு வைத்த அவரின் கூற்று முற்றிலும் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Categories

Tech |