Categories
உலக செய்திகள்

குப்பையில் தூக்கி எறிந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு…. அவசரப்பட்டு தூக்கி எறிந்து விட்டோமோ என எண்ணி கதறிய இளம்பெண்…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி சீட்டை குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு விழுந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ட் ஹெலினாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவருடைய காதலன் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட்டுகளை உதாசீனம் செய்த அந்த இளம்பெண் அவற்றை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
அதனைக் கண்ட அந்த காதலனோ தான் வாங்கிக் கொடுத்த லாட்டரி டிக்கெட்க்கு பரிசு விழுந்து இருக்குமோ என எண்ணி குப்பைத்தொட்டியில் இருந்துஅதை மீண்டும் தேடி எடுத்து சுரண்டி பார்த்தபோது அந்த டிக்கெட்டுக்கு சுமார் 5 கோடி வரை பணம் விழுந்திருந்தது. இதனை அந்தப் பெண்ணிடம் அவருடைய காதலர் கூறியுள்ளார்.

ஆனால் இதனை நம்பாத இந்த பெண் அவருடைய காதலர் தன்னை பிராங்க் செய்வதாக நினைத்து உதாசீனம் செய்துள்ளார்.ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகே அந்தப் பெண்ணிற்கு லாட்டரி டிக்கெட்டில் பணம் விழுந்திருக்கிறது என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனக்கு இது ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி ஆகும். என் வாழ்க்கையில் இதுவரை லாட்டரியில் பணம் விழுந்தது இல்லை இதுவே முதன்முறையாகும். இதை என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார்.

Categories

Tech |