புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பை கிடங்காக மாறிய கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றித் தர வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி குளக்கரையில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதும் பொதுமக்கள் அந்த கிணற்றை உபயோகப்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.
இதனால் அந்த கிணறு தற்போது குப்பை தொட்டியாகவும், நோய் பரப்பும் இடமாகவும் மாறி விட்டது. இதனையடுத்து கிணற்றிற்கு சம்பந்தப்பட்டவர்கள் கிணற்றை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.