கரூர் மாவட்டத்திலுள்ள வடிவேல் நகர் பகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், ஸ்ரீ அம்மன் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த குப்பை கிடங்கில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் சுவாச கோளாறு கண் எரிச்சல் ஆகியவற்றால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.