Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ…. 5 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. நேற்று காலை மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் கரூர்- வாங்கல் செல்லும் சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

Categories

Tech |