Categories
தேசிய செய்திகள்

குப்பை கொட்ட போன சிறுமி… துப்பாக்கி முனையில் கடத்தி சென்று… மூன்று காமுகர்களால் நேர்ந்த கொடுமை…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, சிறுமி தன் வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தியது சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் என மொத்தம் மூன்று பேர், என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 டி இன் கீழ் மூன்று பேர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Categories

Tech |