Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் உறங்கிய தமிழர்…. இப்போ கோடீஸ்வரர்?…. எப்படி தெரியுமா?!!!!

கனடாவில் உள்ள Toronto என்ற நகரில் வசித்து வரும் கோவையை சேர்ந்த Shaws Samson ( வயது 50 ) என்பவர் வறுமையின் காரணமாக பஸ் நிலையத்தில் கூடாரம் அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்தோடு வேலை தேடி வெளியூர் சென்ற இடத்தில் தனது பெற்றோரை தவறவிட்ட Samson தெருத்தெருவாக அலைந்து குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை எடுத்து சாப்பிட்டு அங்கேயே உறங்கி தனது நாட்களை கழித்து வந்துள்ளார். இதையடுத்து குழந்தை நலத்துறைக்கு ஆதரவில்லாமல் 8 வயது சிறுவன் ஒருவன் தவித்து வருவதாக புகார் சென்றுள்ளது.

அதனடிப்படையில் மீட்கப்பட்ட Samson காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு கனடாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 1979-ஆம் ஆண்டில் அவரை தத்தெடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் அதையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டு ஹோட்டல் ஒன்றையும் திறந்தார். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கிய Samson தற்போது பிரபல கோடீஸ்வரராக வலம் வருகிறார்.

Categories

Tech |