மெக்ஸிகோவில் 7 வயது பள்ளி சிறுமியை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் உள்ள ஒரு பள்ளியில் பாத்திமா என்ற 7 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தனது அம்மாவிற்காக காத்திருந்தார். ஆனால் மற்றொரு பெண் சிறுமி பாத்திமாவை தன் கையால் அழைத்துச் சென்றார். இதையடுத்து சிறுமியின் அம்மா வந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை.
பின்னர் போலீசாரிடம் சிறுமியின் அம்மா புகாரளித்தார். இந்த சம்பவம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்துள்ளது.
அதன் பின் போலீசார் விசாரணை நடத்திய வந்த நிலையில் , 4 நாட்களுக்குப் பிறகு மெக்ஸிகோ நகரத்தில் ஒரு குப்பை தொட்டியின் உள்ளே ஒரு பாலிதீன் பையில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சிறுமியின் உடல் நிர்வாணமாக இருந்தது மற்றும் அவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. இதை அடுத்து அங்கு உள்ள CCTV கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ததில் மரியோ ஆல்பர்டோ மற்றும் கிளாடிஸ் ஜியோவானா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சந்தேகத்தின் பெயரில் இந்த ஜோடியின் வீட்டில் சோதனை செய்த போது, இறந்த சிறுமியின் இரத்த அடையாளங்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் காதலித்து வந்ததாகவும், சிறுமியின் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.