Categories
உலகசெய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த தங்க கட்டிகள்…. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் குப்பை தொட்டியில் இருந்து பெருமதிப்புள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சரண்சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று சோதனை இட்ட அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்து ஆறு தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.1,63,07,432.05 இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தங்க  கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பை  தொட்டியில் வீசி இருக்க வேண்டும் என தெரிவித்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். விசாரணையின் முடிவில் தங்க கட்டிகள் தொடர்பாக மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |