53 ஆவது நாளாக தொடர்ந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் கணக்கில் அடங்காதது. தலைநகரை கைப்பற்ற எண்ணி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை உக்ரைன் வீரர்கள் ஆயுதங்கள் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் உக்ரைன் படைகளை சமாளிக்க முடியாத ரஷ்ய வீரர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்கு பகுதி நோக்கி நகர்ந்தனர்.
இதனை அடுத்து பூச்சா நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் விட்டுச் சென்ற சேதமடைந்த டாங்கிகள் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவை அனைத்தும் தற்போது குப்பை கிடங்குகளில் குப்பை போல் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.