Categories
தேசிய செய்திகள்

குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி புகைப்படம்…. தூய்மை பணியாளர் பணி நீக்கம்….. பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி தூய்மையாளர் பாபி என்பவர்,நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெனரல் கஞ்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான பணியை மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் கொண்டு செல்லும் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தூய்மை பணியாளர் பாபி சரிவர தனது பணியை செய்யவில்லை என்று கூறி அவரை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. குப்பை கொண்டு செல்லும் வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் புகைப்படங்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |