கன்னியாகுமாரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்ட தால் ஆறாவது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது.
கோடை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்ப்பது வழக்கம்.
இதனால் படகு போக்குவரத்து தினமும் காலை எட்டு மணிக்குத் தொடங்கி மாலை நான்கு மணி வரை இயக்கப்படுகின்ற நிலையில் காலையில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. கடலின் அடியில் இருக்கும் பாறைகளில் வெளியே தெரிந்தது. மேலும் கடல் சிறிது தூரத்திற்கு மணற்பரப்பு போல் காட்சி அளித்ததால் 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நிலைமை சரியான பிறகு 11 மணியளவில் தொடங்கப்பட்டது. சென்ற சில நாட்களாகவே கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டு பின் உயர்வதும் ஆக இருக்கின்ற நிலையில் நேற்று 6-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்ந்துள்ளது.