Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை…. சாலையில் வெள்ளம் ஓடும் தண்ணீர்….. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது‌. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குமரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக மாம்பழத்துறையாறு அணைக்கு 1 கன அடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு 18 கன அடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு9 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 191 கன அடி தண்ணீரும், பேச்சிப் பாறை அணைக்கு548 கன அடி தண்ணீரும் வருவதால் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதேபோன்று பேச்சிப்பாறை அணையிலிருந்தும் வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் அணைக்கு வினாடிக்கு 5.6 கன அடி தண்ணீர் வருவதால், 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. மேலும் நேற்று காலை முதல் ஆணைக்கிடங்கு,  முள்ளங்கினாவிளை, அடையாமடை, கோழிப்போர்விளை, ஆரல்வாய்மொழி, திற்பரப்பு, பால மோர், தக்கலை, சுருளக்கோடு, குழித்துறை, கன்னிமார், களியல், பூதப்பாண்டி, முக்கடல், மாம்பழத்தாறு, புத்தன், சிற்றார், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

Categories

Tech |