குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குமரிமாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 50 பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடும் படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.