Categories
கன்னியாகுமாரி கொரோனா மாவட்ட செய்திகள்

குமரியில் 70 போலீஸுக்கு கொரோனா…. காவல்நிலையம் மூடல் …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து அங்கு காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |