மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகின்ற 23-ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை அன்று அவசரகால பணிகளுக்கான தலைமை கருவுலகம் மற்றும் கிளை கருவுலம் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.