இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி(33) என்பவரும் பக்ரைன் நாட்டில் தராப் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன் பிடிப்பதற்கு பணியில் அமர்த்தபட்டனர். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மீன்பிடிப்பதற்காக மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர்.
கடந்த 19-ஆம் தேதி அவர்கள் கரை திரும்பி இருக்க வேண்டும் ஆனால் இதுவரை இரண்டு மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களுக்கு ஏதாவது ஆகி இருக்குமா என குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் அருட்ப பணியாளர் சர்ச்சில், மீனவர் குடும்பங்களின் சார்பாக மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு பக்ரைன் அரசை வலியுறுத்துமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.