Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் தங்கமணியே உள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,222 ஆகும். விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். சாலைகளில் குப்பைகளை கொட்டுவதால் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போதிய அளவில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Categories

Tech |