Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார்.  இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன.

ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று ஒரு லட்சம் தொழிலாளர்களும் இங்கு உள்ளன. இத்தொகுதியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

மேலும் இப்பகுதியில் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் நீர் மாசுபாடு உள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோடு-பள்ளிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், எஸ்.பி.பி காலனி அருகே ரயில்வே உயர்மட்ட பாலம், காவிரி ஆர்.எஸ் அருகே உயர்மட்ட பாலம் ஆகிய பணிகள் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தை தனி தாலுகாவாக மாற்றி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்டவையும் தொடங்கப்பட்டுள்ளன. சாயக் கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து ஓடக்கூடிய இந்த குமாரபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாய ஆலை அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

Categories

Tech |