Categories
அரசியல்

குமுறும்  அரசு ஊழியர்கள்…சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பு…!!!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றின்  காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து போக்குவரத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது.அதன் பின்னர் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் படிப்படியாக திறக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஊழியர்கள் அவர்கள் நிறுவனங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்ற வகையில் போக்குவரத்திலும் படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் புறநகர் மின்சார ரயில்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் அரசு ஊழியர்கள் தரப்பில் தற்போது புதிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.அது யாதெனில் அலுவலக கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இவை அனைத்தும் இருந்தாலும் தலைமைச்செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக  ஊழியர்கள் தற்போது புகார் அளித்துள்ளனர். இது கொரோனா காலத்திலும் அரசு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |