Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த காவலர்” திடீரென மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். இங்கு புதுச்சேரியை சேர்ந்த  காவலர் ஹரிஹரன் என்பவரும் தன்னுடைய குடும்பத்துடன் வந்துள்ளார்.

இவர் குடும்பத்துடன் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு கும்பக்கரை அருவிக்கு குளிப்பதற்காக வந்துள்ளார். இவர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் ஹரிஹரனை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு ஹரிஹரனை காரில் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் அருவியில் குளிக்கும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை `ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கரை போலீசார் ஹரிஹரன் மரணம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |