கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை நிறைந்த கும்பக்கரை அருவி அமைந்திருக்கின்றது. எனவே கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும்.
இந்நிலையில் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 28ஆம் தேதி முதல் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்தார்கள். இந்த நிலையில் நிலைமை சீரானதால் இன்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளார்கள்.