கும்பம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், அரசாங்கம் விஷயம் சாதகமாகவே முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று புதியதாக வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.
பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுத்த செயல் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று பெண்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து செல்லும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். இன்று வீண் மனக்கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். பொறுமையுடனும், நிதானத்துடனும் இருங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டும் இல்லை இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே முடிந்தால் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி ரொம்ப செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்