Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும்.. மங்கல நிகழ்வு நடைபெறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ அருள் பலம் உங்களுக்கு துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு இன்று உண்டாகும். உறவினரின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும் அரசு வகையில் நன்மைகள் இன்று  எதிர்பார்க்கக் கூடும். இன்று  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடைய முடியும்.

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் பரிபூரணமாக கிடைக்கும். எப்பொழுதுமே சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரம் நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் பெறக்கூடும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தூரதேசத்திலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம்பச்சை

Categories

Tech |