கும்பம் ராசி அன்பர்களே..! இன்று காலையில் கலகலப்பும் மாலை சலசலப்பும் ஏற்படும் நாளாகவே இருக்கும். குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. பணவரவு கொஞ்சம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும், அதே போல சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை நீங்கள் செய்து முடித்து பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், மருத்துவ செலவுகளுக்கு பின்னே உடல் குணமாகும். சளி, இருமல் பிரச்சனைகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் மந்தமான சூழல் இன்று காணப்படும். எதிலும் அதிகம் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்துவிடுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் . தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் பெறும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தால், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு மற்றும் மயில் நீல நிறம்