கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும், பணம் முடிவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் அனைத்துமே தீரும். சக பணியாளர்களின் மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும்.
மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையேயான மகிழ்ச்சியான நிலை காணப்படும்.பிள்ளைகளின் துணையால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எளிமையாக காரியங்கள் கைகூடும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஓரளவு சிறப்பு ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பச்சை நிறம்