கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் நகைகளையும் பணத்தையும் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று நிதானமாக செயல்பட்டால் தான் இன்றைய நாளை நீங்கள் வெற்றிகரமாக நகர்த்த முடியும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றி விடுவது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும்.
ஆடம்பர செலவுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். கடனை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை இன்று ஓரளவு தடையை உடனே முடியும். இன்று உங்களுடைய வசீகரமான பேச்சு வெளிப்படும். அக்கம்பக்கத்தினர் இடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள், இருந்தாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக பூசல்கள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்