Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. சிக்கல்கள் இருக்கும் … தடைகள் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களுக்கு செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இன்று ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.மனதில் வியாபாரம் பற்றி கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதலாகத்தான் கவனமுடன் செய்ய வேண்டும்.

குடும்பத்தில் கொஞ்சம் நிம்மதி குறையலாம். அதேபோல கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வரலாம். இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள், கடனை நீங்கள் தயவுசெய்து வாங்காதீர்கள் என்று என்னால் முடிந்த அளவிற்கு ஆன்மிகத்தில் மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் முயற்சிகளை மேற்கொண்டு பாடங்களை படியுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதும் போலவே எழுதிப் பாருங்கள் ,அது மனதில் இருப்பதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |