கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரித்து, செல்வநிலை உயரும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். கல்வியிலும் இவற்றை உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பீர்கள். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. வாகனச் செலவு கொஞ்சம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமைகள், சொத்துகளை அடைவதில் தாமதம் இருக்கும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு படிப்பை தொடங்குங்கள். அதேபோல தேர்வு எழுதிய மாணவர்கள் காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டு செல்லுங்கள். படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே அமையும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்