கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளும், குருவருளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களும் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். இன்று ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கல்வியில் இருக்கும்.
ஆர்வமும் மிகுந்து காணப்படும். வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய மனம் அமைதியாக வைப்பதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பாடங்களைப் படியுங்கள். அதுபோலவே தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.பழ வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்திவிட்டு செல்லுங்கள்.
மனம் அமைதியாகவும் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்