கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுகமான சுற்றுலா பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு கௌரவ குறைவால் மன உளைச்சல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று ஓரளவு முன்னேற்றம் அனைத்து விஷயங்களிலும் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் ஓரளவே வந்து சேரும். எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. காரியத்தடை தாமதம் கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்.
விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் கொஞ்சம் மாறலாம். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். கூடுமானவரை மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்வதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கொடுக்கல்-வாங்கலில் ரொம்ப கவனமாக தான் இன்று நீங்கள் செயல்பட வேண்டும். இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களது சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்