கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் அதிகம் பாசம் கொள்வார்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்று வளரும். தொழில் வியாபாரம் செழிக்க தகுந்ததாக பணிபுரிவீர்கள். பணவரவும் உங்களுக்கு திருப்திகரமான அளவில் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் வந்து செல்லும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள் முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யார் பணத்தையும் தயவு செய்து நீங்கள் வாங்க வேண்டாம். ரொம்ப கவனமாக தான் நீங்கள் இன்று செயல்படவேண்டும்.
மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை நீங்கள் எண்ண வேண்டாம். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு குறிக்கோளாக வீண் அலைச்சல் கொஞ்சம் கூடுதல் உழைப்பும் இருக்கும். பயணங்கள் செல்லும் பொழுது பொருட்களின் இது ரொம்ப கவனமாக இருங்கள். மாணவக் கண்மணிகள் தேர்வு முடியும் வரை மனதை அமைதியாக வைத்துக் கொண்டு கல்வியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களை படிக்கும் பொழுது தெளிவாகப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். தேர்வு முடியும் வரை உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்