கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். உடல் நலம் சீராகி உற்சாகத்தை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செய்தொழிலில் நல்ல லாபம் வந்து சேரும். உற்றார் உறவினர்களின் உதவிகளும் கிடைக்கும். உறவினர் வகையில் செலவும் இருக்கும், கவனத்தில் கொள்ளுங்கள். யாரிடமும் தேவைக்காக கடன் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் எப்பொழுதுமே நீங்கள் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை விலகி செல்லும். அதேபோல கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்த்து விட்டுச் செல்லுங்கள். அதேபோல தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும். மாணவர்கள் சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து செல்லுங்கள். மிக முக்கியமாக காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்குவதற்கு முன்பு பாலை அருந்தி விட்டு செல்லுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை செய்தாலே கல்வியில் நீங்கள் எளிதாக வெற்றி பெற முடியும்.
மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்ளுங்கள் சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்