கும்பம் ராசி அன்பர்களே..! நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாளாகவே இருக்கும். எப்பொழுதும் இருக்கக்கூடிய தொழிலை விரிவுபடுத்தலாம் அல்லது புதிய தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை உங்களுக்கு வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் பணப்புழக்கம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். திடீர் பயணம் ஒன்று மேற்கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் இருக்கட்டும்.
தொழில் ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளும் அவ்வப்போது வந்து செல்லும். வரவேண்டிய பாக்கிகள் மட்டும் மிகப்பெரிய நிலையிலேயே வந்து செல்லும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பண வரவு இருக்கும் பக்தி மிக்க நாளாகவும் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு, கரும்பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். ரொம்ப நல்லபடியாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை மற்றும் இளம் நீலம் நிறம்