Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. நிதானமாக செயல்படுங்கள்.. ஆலயம் சென்று வாருங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோசம் உங்களுக்கு அதிகரிக்கும். மற்றவர் நலன் கருதி எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். புது மனை கட்டி குடியேறும் எண்ணம் உங்களுக்கு மேலோங்கும் . இன்று தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடனுதவிகள் கிடைக்கும்.

கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஒரளவுக்கு அனுகூலமான பலனை நீங்கள் இன்று பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் வீணான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொறுமையாக இருங்கள் நிதானமாக செயல்படுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அதுமட்டுமில்லை இன்று தேர்வு முடியும் வரை கொஞ்சம் பாடங்களை கவனமாக படித்து எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |